அசல் சூட்டிங் ஓவர்! பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் அஜித்!!

நவம்பர் 26, 2009 | தமிழ் சினிமா | Tags:,

Ajithவெளிநாட்டு சூட்டிங்கை முடித்து திரும்பிய அசல் படக்குழுவினர் சமீப காலமாக சென்னையில் முகாமிட்டு சூட்டிங்கை நடத்தி வருகிறார்கள். ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்த சூட்டிங்கில் அஜித், பாவனா பங்கேற்று நடித்தனர்.

முக்கியமான காட்சியொன்று தி.நகரில் உள்ள சிவாஜி கணேசனின் வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அசல் படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் படமாக்கப்பட்டு முடித்துள்ள நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கலுக்கு அசலை வெளியிட திட்டமிட்டிருக்கும் அசல் குழுவினர், இதற்கான அறிவிப்பை வெளியிடவும், அசல் குறித்து பகிர்ந்து கொள்ளவும் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறார்கள்.

அநேகமாக டிசம்பர் 15ம்தேதி அஜித் மற்றும் அசல் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என தெரிகிறது.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat