வெங்கட் பிரபுவின் பூச்சாண்டி!
கோவா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், தனது அடுத்த படத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்தப் படத்தைத் தயாரிப்பவர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா. வெங்கட் பிரபுவின் முந்தைய படமான சரோஜாவை தயாரித்தவர் இவர்தான்.
படத்துக்கு பூச்சாண்டி எனப் பெயர் வைத்துள்ளனர். பிரேம்ஜி அமரன் மற்றும் சிவா நாயகர்களாக நடிக்கிறார்கள்.
வழக்கம்போல யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகக் குறுகிய காலத்தில் இந்தப் படத்தை வெற்றிப் படமாக எடுத்துத் தருவேன் என்று உறுதியளித்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்தப் படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் மற்றும் அஜீத் படங்களை இயக்கவிருப்பதால், நிச்சயம் பூச்சாண்டியை ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் முழு வேகத்துடன் களமிறங்கியுள்ளாராம் வெங்கட் பிரபு.
படத்தின் நாயகிகள் குறித்து வெங்கட் பிரபு இன்னும் அறிவிக்கவில்லை.

Link to this page