அசின் மார்க்கெட் வலுவாக உள்ளது! – சொல்கிறார் நயன்தாரா!

நயன்தாரா மலையாளத்தில் நடித்து சுமாராக ஓடிய படமான பாடிகார்ட், இப்போது தமிழில் விஜய் நடிக்க காவல்காரன் என்ற பெயரில் தயாராகிறது (காவல்காரன் பெயரை இன்னும் உறுதி செய்யவில்லை விஜய்!).

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் அசின். மலையாளத்தில் நயன்தாரா நடித்த வேடத்தைதான் அசின் செய்கிறார்.

நயன்தாராவும் அசினும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் திரையுலகுக்கு வந்தாலும் அசின் நடிப்பு, கேரியரில் குறியாக இருந்து, பாலிவுட்டிலும் ஜெயித்து அகில இந்திய நட்சத்திரமாகிவிட்டார்.

நயன்தாராவோ காதல், கிசுகிசு, மன அழுத்தம் என சொந்தப் பிரச்சினைகளில் சிக்கி, இருந்த மார்க்கெட் மற்றும் கிளாமரையும் கோட்டை விட்டார்.

இந்த நிலையில், தான் மலையாளத்தில் நடித்த வேடத்தில், தமிழில் அசின் நடிப்பது குறித்து நயன்தாரா கூறியுள்ளதாவது:

இந்த வேடம் அசினுக்கு சிறப்பாக இருக்கும். பொதுவாக ஒரு நடிகை இன்னொரு நடிகைக்கு ஆலோசனை கேட்பதும் இல்லை, சொல்வதும் இல்லை. அதை யாரும் விரும்புவதில்லை. அந்த வகையில் நான் செய்த வேடத்தை தமிழில் அசின் செய்வது குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இன்னொன்று, அசின் புதுமுக நடிகையல்ல.

அவருக்கென்று தனி ஸ்டைல் இருக்கிறது. தமிழ் திரையுலகில் அசின் மார்க்கெட் வலுவாக இருக்கிறது.

அவர் சிறந்த நடிகை. கேரக்டர்களில் எப்படி நடிக்க வேண்டும் என்றும் அவருக்கு நன்றாக தெரியும்” என்றார்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat