போகாதே போகாதே இலங்கைக்குப் போகாதே!: அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்
இந்திய திரைப்பட விழா இலங்கையில் நடப்பதற்கும், நடிகர், நடிகைகள் அவ்விழாவில் கலந்துகொள்ளவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ் அமைப்புகளால் தன்னுடைய காவல்காரன் படத்துக்கு என்னென்ன சிக்கல்கள் வரப்போகிறதோ என்று கலக்கத்தில் இருக்கிறார் விஜய். இந்தக் கலக்கத்திற்கு காரணம் காவல்காரன் ஜோடியான அசின்.
ஆமாங்க…படப்பிடிப்புக்காக அசின் இலங்கைக்கு போறாங்க. அவருடைய ஆதர்ச இந்தி நடிகரான சல்மான் கான் இலங்கையில் நடந்த படவிழாவில் படு ஆர்வத்துடன் கலந்துகொண்டது தெரிந்ததே. அவருடன் இலங்கைக்குப் போன ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட நடிகர், நடிகைகளின் படங்களை தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் வெளியிட் தமிழ்த் தென்னிந்திய கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சல்மான்கான் இலங்கை மீதுள்ள பிடிப்பால் தன்னுடைய அடுத்தப்பட படப்பிடிப்பை அந்த மண்ணில் நடத்துகிறார். கதாநாயகி அசினும் படப்பிடிப்பிற்காக இலங்கை செல்கிறார். அவர் அப்படி இலங்கைக்கு போனால்… அசினுடன் ஜோடி போடும் காவல்காரன் படத்திற்கு என்ன கதி ஏற்படுமோ என்ற கலக்கத்தில் விஜய் இருப்பதாகத் தகவல்.
அவர் மட்டுமல்லாது, தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பும் இலங்கை செல்லவிருக்கும் அசின் மீது கோபத்தில் உள்ளது. விஜய்யும் ‘காவல்காரன் ரிலீஸ் வரையுமாவது இலங்கைக்குச் செல்லாமல் இரும்மா!” என்று அசினிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அசின் அசைந்துகொடுப்பாரா தெரியவில்லை!

Link to this page