பசு மாட்டுக்கு ஆசின் பெயர் – கருணாநிதி பேரன் படத்தில் வினோதம்!

முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி ஹீரோவாக நடித்து அறிமுகமாகும் வம்சம் படத்தில் பசு மாட்டுக்கு ஆசின் என்று பெயரிட்டுள்ளனராம்.

இது கோலிவுட்டில் புது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளதாம். முதல்வரின் மகன் தமிழரசு தயாரித்துள்ள படம்தான் வம்சம். இதில் அவரது மகன் அருள்நிதி நாயகனாக நடித்துள்ளார். சுனேனா நாயகியாக நடித்துள்ளார். படத்தை பசங்க புகழ் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் ஆடியோவை வெளியிட்டனர்.

இப்போது இந்த் படத்தில் வரும் ஒரு மேட்டர் கோலிவுட்டில் சலசலப்பை கிளப்பியுள்ளது. அதாவது படத்தில் ஒரு பசு மாடு முக்கியக் கதாபாத்திரம் என்று கூறும் வகையில் வலம் வருகிறதாம். அந்த மாட்டுக்கு ஆசின் என்று பெயர் வைக்கிறாராம் நாயகி. செல்லமாக ஆசினு, ஆசினு என்று கூப்பிடுவாராம் சுனேனா.

இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழ்த் திரையுலகினரின் பேச்சைக்கேட்காமல் ஆசின் இலங்கையில் போய் முகாமிட்டிருப்பதால் அவரை கிண்டலடிக்கும் வகையிலும்,கேலி செய்யும் வகையிலும் இப்படி பேர் வைத்து விட்டார் பாண்டிராஜ் என்கிறார்கள்.

ஆனால் இதை பாண்டிராஜ் மறுத்துள்ளார். ஆசின் இலங்கை போவதற்கு முன்பே இந்தக் கதையை உருவாக்கி விட்டேன். அப்போதே கேரக்டர்களுக்குப் பெயரும் வைத்து விட்டோம். எனவே இது புதிதாக வைத்த கேரக்டரோ, பெயரோ அல்ல என்றார் அவர்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat