மீண்டும் இணைகிறது சிம்பு – யுவன் ஜோடி
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த புதிய படத்திற்கு என்னை தெரியுமா என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார். இதுவும் ரீமேக் படம் தானாம். இப்படத்தில் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்கிறார். இயக்குனர் கிருஷ் தான் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். ரிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்திற்கான காட்சிகளை எடிட் செய்கிறார்.
சிம்புவின் மிக நெருங்கிய நண்பரான யுவன்சங்கர் ராஜா, இப்படத்தில் மீண்டும் சிம்புவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். என்னை தெரியுமா படத்திற்கான புகைப்பட சூட்டிங் முடிந்துள்ள நிலையில் அவைகள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. என்னை தெரியுமா படத்தின் படப்பிடிப்பு நாளை துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Link to this page