‘கட் அன்ட் ரைட்’ திரிஷா!
திரிஷா நடித்து அறிமுகமாகும் முதல் இந்திப் படத்தில் அவருக்கு அட்டகாசமான கேரக்டராம். கறாரான நகராட்சி ஆணையராக வருகிறாராம் திரிஷா.
அவருக்கும், நாயகன் அக்ஷய் குமாருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் முக்கியக் கதையாம்.
பிரியதர்ஷன் இயக்க, அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார் திரிஷா இப்படத்தில். இது அவருக்கு முதல் இந்திப் படம். இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்.
பிரியதர்ஷன்தான் சினிமாவுக்கு திரிஷாவை அறிமுகப்படுத்தியவர். எனவே இந்தியிலும் தனக்கு நல்ல அறிமுகத்தை பிரியன் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் திரிஷா. இப்படத்தை தயாரித்திருப்பவர் அக்ஷய்குமார்.
மகாராஷ்டிராவின் பல்தான் நகரில் சாலை கான்டிராக்டராக இருக்கிறார் அக்ஷய் குமார். சுத்தமான மராத்திக்காரர். டிப்பிக்கல் மராத்தியாக இருப்பவர். கையில் ஒரு கைப்பை, குடை சகிதம் எங்கும் செல்பவர்.
மறுபக்கம் நாயகி திரிஷா. அதே நகரின் நகராட்சி ஆணையராக வருகிறார் திரிஷா. படு கறரானாவர். ரூல் புக்கில் என்ன உள்ளதோ அதை மட்டுமே செய்வார். லஞ்சம், ஊழல் என்றால் கண்களிலும், காதுகளிலும் நெருப்பைக் கக்குபவர்.
அறிவுப்பூர்வமாக எதையும் அணுகும் திரிஷாவுக்கும், எப்போதும் ஒருவித டென்ஷனுடனேயே இருக்கும் அக்ஷய்குமாருக்கும் இடையே நடக்கும் மோதல்கள், பின்னர் ஏற்படும் காதல் என படம் முழுக்க படு கலாய்ப்பாக இருக்குமாம்.
இந்தப் படத்தில் திரிஷாவுக்கு நடிக்கவும், ஆடவும், குத்தாட்டம் போடவும் போதுமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறாராம் பிரியதர்ஷன். எனவே இந்தப் படம் தனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்துத் தரும் என்ற பெரும் நம்பிக்கையி்ல் உள்ளார் திரிஷா.

Link to this page