நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை : நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்
நித்யானந்தாவுடன் எனக்கு எந்தவிதமான செக்ஸ் தொடர்பும் இல்லை என நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து யோகா கலையை போதித்து வருபவர் நித்யானந்தா.
கடந்த மார்ச் மாதம் சில “டிவி’ சேனல்களில், நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தமிழகத்தில் நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.தலைமறைவாக இருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தனது ஆசிரமத்தில் பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றி வருகிறார்.
இதற்கிடையே, தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கர்நாடகா சி.ஐ.டி.,போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நித்யானந்தாவின் அறைக்கு ஓரிரு முறை சென்றுள்ளேன். அவருக்கும் எனக்கும் எந்த விதமான செக்ஸ் தொடர்பும் கிடையாது. டிவியில் காட்டப் பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை. டிவியில் காட்டப்பட்ட பெண் நான் அல்ல. நித்யானந்தா எனக்கு எந்த செக்ஸ் தொல்லையும் கொடுக்கவில்லை என்றார்.
ரஞ்சிதாவின் வாக்குமூலத்தை சி.ஐ.டி., போலீசார் கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று பதிவு செய்தனர்.

Link to this page