கவர்ச்சி இல்லை – போணியாகாத ஷ்ரியா படம்

ஜூலை 24, 2010 | தமிழ் சினிமா

கவர்ச்சி போதாது என்ற காரணத்திற்காக ஷ்ரியா நடித்துள்ள முதல் ஆங்கிலப் படம் விற்பனையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளாம்.

இந்தியாவின் தீபா மேத்தா ஆங்கிலப் படங்களை இயக்குவதில் பிரபலமானவர். இவரது சகோதரரான அசோக் மேத்தா இயக்கியுள்ள ஆங்கிலப் படம்தான் குக்கிங் வித் ஸ்டெல்லா. இதன் நாயகி ஷ்ரியா.

ஷூட்டிங் முடிந்து படம் முழுவதுமாக தயாராகி ஒரு வருடமாகிறது. ஆனால் இன்னும் படத்தைக் காணோம். என்ன ஏது என்று விசாரித்தால், படத்தில் ஏகப்பட்ட ஐட்டங்கள் இல்லாததால் விற்பனையாகவில்லையாம்.

தீபாவின் முந்தைய படங்களான ஃபயர், எர்த், வாட்டரில் இருந்தது போல் இதில் எந்த சர்ச்சையான விஷயங்களும் இல்லை. கவர்ச்சி பாடலோ, காட்சியோ கூட இல்லை.இதனால் படத்தை வாங்க பெரும் தயக்கம் காணப்படுகிறதாம்.

அதேசமயம், இது தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான படம் கிடையாது. தயாரிப்பு மட்டுமே அவர். இதனால்தான் அவரது டிரேட் மார்க் ஐட்டங்கள் எதுவும் இதில் இல்லையாம்.

ஆனால் ஏதாவது இருந்தால்தானே வாங்க முடியும் என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்களாம்.

பொல்லாப்பாக படம் எடுத்தாலும் சிக்கல், எடுக்காவிட்டாலும் சிக்கலா…?

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat