விருந்தாளி – திரை விமர்சனம்
வட்டிக்கு பணம் கொடுப்பவர் ஈஸ்வர். அதே ஊரில் தபால் காரராக இருக்கும் பாலாசிங் மகள் தியானாவுக்கும், ஈஸ்வருக்கும் மோதல் ஏற்பட்டு காதலாக மலர்கிறது.
அதே கிராமத்துக்கு போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் ராஜூம், தியானாவை விரும்புகிறார்.
ஈஸ்வர் நண்பன் புவன்கோடீஸ்வர பெண்னொருத்தியை காதலிக்கிறார். அப்பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க உறவினர்கள் சதி செய்கின்றனர். எனவே காதலை எதிர்க்கிறார்கள். ஈஸ்வரோ காதல் ஜோடிக்கு பக்கபலமாக நின்று திருமணத்தை முடிக்கிறார்.
இதனால் ஏற்படும் மோதலில் புவன் கொல்லப்படுகிறார். அதை நேரில் பார்க்கும் தியானாவையும் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அவர் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்.
வட்டித்தொழில் செய்பவராக வரும் ஈஸ்வர் வெகுளித்தனம் காதல், ஆவேசம் என வேறுபட்ட பரிமாணங்களில் ஸ்கோர் பண்ணுகிறார். தியானா கையால் வட்டி கடை திறப்பது அவருடன் எடுத்த போட்டோவை வீட்டில் மாட்டி ரசிப்பது… தனது பெயரில் கடிதம் எழுதி போட்டு தியானாவை வீட்டில் கொண்டு தரவைப்பது போன்றவை காதல் முத்திரைகள். தியானா யதார்த்த நடிப்பில் வசிகரிக்கிறார்.
சேரன்ராஜ் மிரட்டல் வில்லன். ஈஸ்வர் தந்தையாக வரும் நாசர், பாலாசிங், பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. சிங்கம்புலி சிரிக்க வைக்கிறார்.
கவித்துவமான காதல், எதிர்பாராத திருப்பங்களுடன், காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் வாட்டர் மேன். ஆரம்ப காட்சிகள் இழுவையாக நீள் வதை குறைத்து இருக்கலாம். கொலை வழக்கில் தண்டனை பெறும் நாசரின் பிளாஸ்பேக்கில் வலு இல்லை.
எஸ்.எஸ்.குமரன் இசையில் பாடல்கள் இனிமை.

Link to this page