சென்னையில் மன்மதன் அம்பு

கமலின் மன்மதன் அம்பு படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்து அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர்.

சொகுசு கப்பலில் நடந்த முதல் ஷெட்யூ‌லில் ஏறக்குறை 60 சதவீத படம் முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பாடல் கம்போஸிங்கில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும் பிஸியாக உள்ளனர். இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு லொகேஷன் அனுமதி வாங்கும் வேலையும் நடந்து வருகிறது.

மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் மாதவன், த்‌ரிஷா, சங்கீதா ஆகியோரும் நடிக்கின்றனர்.



Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat