காப்பி அடிக்கப்பட்ட கமல் படம்

ஜூலை 29, 2010 | தமிழ் சினிமா | Tags:

தொலைத்தொடர்புகள் வளர்ந்துவிட்ட நிலையில் ஆப்பி‌ரிக்க சினிமாவை காப்பி அடித்தாலே அடுத்த கணம் அமைஞ்சிக்கரை ரசிகனுக்கு தெ‌ரிந்துவிடும். இந்நிலையில் கமல் நடித்த படத்தை காப்பியடித்து இந்தியில் ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் அ‌க்சய் குமார் நடிப்பில் ஹவுஸ்ஃபுல் என்றொரு படம் வெளிவந்தது. படம் சூப்பர் ஹிட். இந்தப் படத்தை தயா‌ரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பார்த்திருக்கிறார். பார்த்தவருக்கு ஷாக். காரணம் கமலையும், பிரபுதேவாவையும் வைத்து அவர் தயா‌ரித்த காதலா காதலா படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி காப்பி அடித்திருக்கிறார்கள்.

கடுப்பானவர் உடனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ஹவுஸ்புல் படத்துக்கு கோர்ட் இப்போது தடை விதித்திருக்கிறது.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat