அஜித் ரசிகர்களுக்காக சிம்பு எடுத்த முடிவு!
அஜித் ரசிகர்களுக்காக நடிகர் சிம்பு 3 இடியட்ஸ் படத்தில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படம் வசூலை வாரி குவித்தது.
இதையடுத்து டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ஜெமினி நிறுவனம் இந்த படத்தை தமிழில் தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின.
இப்படத்தின் இப்படத்தில் நடிக்கும்படி இளம் நடிகர்கள் பலருக்கும் தூது அனுப்பப்பட்டது. ஆனால் பலரும் 3 ஹீரோ கதை என்பதால் நடிப்பதை உறுதிபடுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். நடிகர் விஜய் மட்டும் நடித்த தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. நடிகர் மாதவன் நடிக்க மறுத்து விட்டார்.
நடிகர் சிம்பு முதலில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டு இப்போது பின் வாங்கி விட்டாராம்.
ஏன் இந்த திடீர் முடிவு என்று அவரிடம் கேட்டதற்கு, 3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்க முடியாது. இந்தப் படத்தில் ஹீரோ விஜய். அவர் பெரிய நடிகர். ஆனால் எனக்கு அஜித் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கோபத்துக்கு நான் ஆளாக முடியாது. எனவே இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை, என்று கூறுகிறாராம்.
சிம்பு விலகலைத் தொடர்ந்து அந்த படத்தில் சிம்புவுக்கு பதிலாக நடிகர் ஜீவா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Link to this page