கடைசியாக நடித்த ஓடும் மேகங்களே ரஞ்சிதா படத்தை வாங்க போட்டா போட்டி

ரஞ்சிதா கடைசியாக நடித்த ஓடும் மேகங்களே படம் ரிலீசுக்கு தயாராகிறது. இப்படத்தை வாங்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் ரஞ்சிதா சாப்ட்வேர் நிறுவன சேர்மனாக நடித்துள்ளார். இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளை கருவாக வைத்து இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார். நாயகனாக உதய், நாயகியாக ரோஷினி நடித்துள்ளனர்.

சாரா மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பாரதமணி தயாரித்துள்ளார். வி.தஷி இசையமைத்துள்ளார். ஆதி, மைக்கேல் பிரபு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

நித்யானந்தா, ரஞ்சிதாவின் படுக்கையறை வீடியோ காட்சிகள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு இதன் படப்பிடிப்பு முடிந்தது. ரஞ்சிதா பதினைந்து நாட்கள் நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் செழியன் கூறும் போது நியூயார்க், லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தமிழ் நாடு என சர்வதேச அளவில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். ரஞ்சிதா கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது. படம் முழுக்க வருகிறார் நாயகனும், நாயகியும் அவரது சாப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கும் சைபர் கிரைம் கிரிமினல்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

படத்தில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பரபரப்பாக பேசப்படும் என்றார்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat