லண்டன் நடிகை எமியை காதலிக்கவில்லை- ஆர்யா

ஆகஸ்ட் 4, 2010 | தமிழ் சினிமா | Tags:

மதராசபட்டினம் படத்தில் ஜோடியாக நடித்த லண்டன் நடிகை எமியை, ஆர்யா காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசுவதாகவும் கூறப்பட்டது.

பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படப்பிடிப்பில் இருந்த ஆர்யாவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

எமியும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் வேறு மாதிரி தொடர்புகள் இல்லை. சமீபத்தில் அவர் சென்னை வந்தார். அப்போது மதராசபட்டினம் படத்தை விளம்பரபடுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தியேட்டர்களுக்கு அழைத்து போனேன். எமி என்னையும், இந்த ஊரையும் பிடித்திருப்பதாக சொன்னார்.

திருமணம் பற்றி இன்னும் நான் யோசிக்கவில்லை. அது நடக்கும்போது நடக்கும். எனக்கு நடக்கும் திருமணம் காதல் திருமணமாக கூட இருக்கலாம்.

இவ்வாறு ஆர்யா தெரிவித்தார். மேலும் அவர்கூறியதாவது:-

பாஸ் என்ற பாஸ்கரன் படம் சிறப்பாக வந்துள்ளது. இதில் முழுக்க காமெடி செய்துள்ளேன். முந்தைய படங்களை விட வித்தியாசமான ரோல் என்பதால் சவாலாக இருந்தது. இயக்குனர் ராஜேஷ் காமெடி சீன்கள் வைப்பதில் தனித்துவம் உள்ளவர். அவரிடம் நிறைய கற்றேன்.

சமீப காலத்தில் சிரிக்க வைக்கும் படங்கள் வரவில்லை. அந்த குறை போக்கி வயிறு குலுங்க இந்த படம் சிரிக்க வைக்கும். காதல் காட்சிகளும் அற்புதமாக வந்துள்ளது. நயன்தாரா சூப்பராக நடித்துள்ளார்.

நான் கல்லூரி இறுதியாண்டு முடித்து வேலை தேடும் கேரக்டரிலும், நயன்தாரா இறுதி ஆண்டு படிக்கும் மாணவி கேரக்டரிலும் நடித்துள்ளோம். நானும், நயன்தாரா, சந்தானம் போன்றோரும் சந்திக்கும் சீன்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் காட்சிகளாக்கப்பட்டு உள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. கே.எஸ்.சீனிவாசன் தயாரித்துள்ளார் என்றார்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat