கார்த்தியை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா? – தமன்னா ஆவேசம்

ஆகஸ்ட் 8, 2010 | தமிழ் சினிமா | Tags:

தமன்னாவும் கார்த்தியும் காதலிப்பதாக கிசு கிசு பரவியுள்ளது. இருவரும் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். ஆனாலும் வதந்தி நின்ற பாடில்லை.

கார்த்தியும் தமன்னாவும் “பையா” படத்தில் இணைந்து நடித்தனர். மீண்டும் “சிறுத்தை” படத்திலும் ஜோடி சேருகிறார்கள். எனவே தான் அவர்கள் மீது வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கார்த்தி சிபாரிசில்தான் தமன்னாவுக்கு இரண்டாவது தடவை அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்கின்றனர்.

காதல் பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, வழக்கம்போலவே மறுத்தார். அவர் சொல்கிறார்.

நானும் கார்த்தியும் நல்ல நண்பர்கள் இருவரும் “பையா” படத்தில் இணைந்து நடித்த அனுபவம் இனிமையானது. நாங்கள் காதலிப்பதாக வெளியான செய்திகள் பார்த்து சிரிப்பு வந்தது. ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. இருவரும் ஒரே துறையில் இருப்பதால் இது போன்று பேசப்படுவது சகஜமானதுதான். எனவே இதை நான் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை.

என்னுடைய கவனம் எல்லாம் சினிமாவில் தான் இருக்கிறது. சிறந்த படங்களில் நடித்து நிறைய விருதுகள் வாங்கிய பிறகு திருமணம் செய்து செட்டில் ஆவேன்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat