வதந்திகளை பற்றி கவலையில்லை: ஆர்யா பதில்

ஆகஸ்ட் 8, 2010 | தமிழ் சினிமா | Tags:

கோலிவுட்டில் சமீப காலமாக கார்த்திக்கு அடுத்தபடியாக காதல் கிசுகிசுக்களில் அதிகம் அடிபடுவது ஆர்யாவின் பெயர் தான்.

ஆரம்ப காலம் முதல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் மதராசப்பட்டிணம் படம் வரை ஆர்யா ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் அந்த படத்தின் நாயகியுடன் ஆர்யாவிற்கு காதல் என்ற செய்தி வெளியான வண்ணம் உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது ஆர்யா கூறுகையில், என்னை பற்றி வரும் கிசு கிசுக்கள் பற்றி நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்தது முதல், என்னுடன் ஜோடியாக நடிப்பவர்களுடன் இணைத்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பூஜா தொடங்கி எமி வரை இந்த பட்டியல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கிசு கிசு வருவதற்கு பயந்து யாருடனும் பேசாமல் இருந்துவிட முடியாது. என்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் நான் பேசுவது போலவே கதாநாயகிகளுடனும் பேசுகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது. நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியும், என்னிடம் பழகுபவர்களுக்கு தெரியும்.

எனது எண்ணம் முழுவதும் நடிப்பில்தான் உள்ளது. அதனால் வதந்திகளை பற்றி நான் கவலைப்படவில்லை. சொந்த நிறுவனம் மூலம் படித்துறை என்னும் படத்தை தயாரித்து வருகிறேன். தரமான படங்களை தொடர்ந்து தயாரிக்கவே நான் ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஆர்யா தெரிவித்துள்ளார்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat