நான் மகான் அல்ல, வம்சம், இனிது இனிது 5 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்
வம்சம்”, “காதல் சொல்ல வந்தேன்” ஆகிய இரு படங்களும் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. “வம்சம்” படத்தில் அருள்நிதி- சுனேனா ஜோடியாக நடித்துள்ளனர். பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவர் “பசங்க” ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.
ஒரு வம்சத்துக்குள் நடக்கும் மோதல், சென்டிமெண்ட் கதையே இப்படம் என்றார் பாண்டிராஜ்.
“காதல் சொல்ல வந்தேன்” படமும் இதே நாளில் ரிலீசாகிறது. இதில் பாலாஜி, மேக்னா சுந்தர் ஜோடியாக நடித்துள்ளனர். பூபதிபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே “தேவதையை கண்டேன்”, “திருவிளையாடல்”, “மலைக்கோட்டை” போன்ற படங்களை டைரக்டு செய்தவர்.
சி.ஜெயக்குமார் தயாரித்துள்ளார். காதல் சொல்ல வந்தான் ஒரு இளைஞன். ஆனால் சொல்லவில்லை. காதல் என்ன ஆனது என்பதே கதை என்றார் இயக்குனர்.
“இனிது இனிது” படம் வருகிற 20-ந்தேதி ரிலீசா கிறது. பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ளார். தெலுங் கில் வெற்றிகரமாக ஓடிய “ஹேப்பி டேஸ்” என்ற படத்தின் தமிழ் ரீமேக்கே இப்படம். கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையே இப்படம். கார்த்தி, காஜல்அகர்வால் ஜோடியாகயுள்ள “நான் மகான் அல்ல” படமும் இதே நாளில் ரிலீசாகிறது. சுசீந்திரன் இயக்கியுள்ளார். கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சென்னையில் நடுத்தர குடும்பமொன்று சந்திக்கும் பிரச்சினைகளே கதை.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கும் “மாஸ்கோவின் காவிரி” படம் வருகிற 27-ந்தேதி ரிலீசாகிறது. இதில் ராகுல், சமந்தா ஜோடியாக நடித் துள்ளனர். எவ்வளவு உயர்ந்தாலும் கலாசாரம் முக்கியம் என்பதை கரு வாக வைத்து உருவாகி யுள்ளது.

Link to this page