நினைவில்லை – மயக்கத்தில் அசின்
இலங்கை சென்றதோடு பாசிஸ ராஜபக்சேயின் அந்தரங்க அடிவருடியைப் போல் பேசியவர் அசின். எனக்கு சென்னை செல்லவே பயமாக இருக்கிறது, கொழும்பிலேயே தங்கிவிடலாம் போல் இருக்கிறது என்றெல்லாம் சிங்கள திமிருக்கு மசாஜ் செய்த அசின் இப்போது அம்னீஷியா பேஷன்டாக பிளேட்டை திருப்பிப் போட்டிருக்கிறார்.
இந்த அலட்டல் நாயகி இப்போது விஜய்யுடன் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இருப்பது சென்னை அல்லவா? அசினின் நாவும் அதற்கேற்றபடி நர்த்தனம் ஆடுகிறது.
சென்னை வர எனக்கு பயமாக இருக்கிறது என்று நான் சொன்னதாக நினைவில்லை என மறதி வியாதிக்காரரைப் போல் பசப்பியிருகிக்கிறார் அசின். நான் நடிகை… கூப்பிட்டால் போய்தான் ஆகணும் என்றெல்லாம் தனது பழைய பல்லவியை திருப்பி பாடியிருக்கிறார்.
நிழலுக்கு மாறும் இந்த பச்சோந்திக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய திரையுலகினரின் மவுனம்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை, எந்த தமிழராலும்.

Link to this page