ஒரு கோடி சம்பளம் தமன்னா கன்டீஷன்
நடிகை தமன்னா, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிக்க உள்ளதாக தன்னை தேடி வரும் பட வாய்ப்புக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.
தான் தனது சம்பளத்தை உயர்த்தியது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் குறைந்த தொகைக்கு நடிக்க தயாராக இல்லை.
மார்க்கெட் மதிப்பின் அடிப்படையிலேயே எனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளேன்.
பொதுவாக படங்களின் பட்ஜெட் மார்கெட் மதிப்பை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதே போன்று மார்கெட் மதிப்பை வைத்தே தயாரிப்பாளர்கள் எனது சம்பளத்தையும் வழங்கட்டும்.
நான் அவர்களிடம் இருந்து அதிகத் தொகையை எதிர்பார்க்கவில்லை. நான் இதுவரை நடித்த அனைத்து படங்களிலுமே, எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன்.
என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் எப்போதும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.
இவ்வாறு தமன்னா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமன்னா தற்போது நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமன்னா எடுத்திருக்கும் இந்த கரார் முடிவால் தயாரிப்பாளர்கள் கதிகலங்கி போயிருக்கின்றனர்.

Link to this page