காதல் சொல்ல வந்தேன் – திரை விமர்சனம்

ஆகஸ்ட் 17, 2010 | திரை விமர்சனம்

கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா மீது முதலாமாண்டு மாணவர் பாலாஜிக்கு காதல். மேக்னா தம்பியாக நினைத்து பழங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலை வெளிப்படுத்தும் பாலாஜி அவர் இல்லாமல் வாழ முடியாது என்கிறார். மேக்னாவே காதலை ஏற்க மறுக்கிறார்.

அவரை வசியப்படுத்த தற்கொலை நாடகம் ஆடுகிறார் பாலாஜி. காதல் நிறைவேறியதா? என்பது கிளைமாக்ஸ்…

காதல் கதையை கலகலப்பு விறுப்பு என காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன். புதுமுகம் பாலாஜி, கேரக்டரில் பொருந்துகிறார். மேக்னா சுந்தரை பார்த்த மாத்திரத்திலேயே ஓடோடி போய் பள்ளியில் தனது காதலை ஒதுக்கிய பெண்ணுக்கு போன் போட்டு நீ சம்மதிச்சிருந்தா இப்படி அழகான பெண் கிடைச்சிருக்காது. ஒத்துக் காததுக்கு நன்றி என்று சொல்லும் ஆரம்பமே அமர்க்களம்…

மேக்னாவுடன் நட்பாக பழகி மனதில் இடம் பிடிப்பது அழகு… மேக்னாவை காதலிக்கும் சீக்கிய மாணவனுக்கு உதவுவது போல் நடித்து காதலியை வளைக்கும் சீன்கள் உச்சக்கட்ட காமெடி.

ஊருக்கு புறப்படும் மேக்னாவிடம் காதலை வெளிப்படுத்த முயற்சிக்கையில் தன்னை அக்கா என்று அழைக்ககுமாறு அவர் சொல்வது திருப்பம்….

காதல் தோல்வியில் சோகமாவதில் மனதில் இறங்குகிறார். கிளைமாக்ஸ் இதயங்களை உலுக்குகிறது.

மேக்னா சுந்தர் அழகு பதுமையாய் ஜொலிக்கிறார். பாலாஜியின் காதலை ஏற்க முடியாமலும் வெறுக்க முடியாமலும் தவிக்கையில் தேர்ந்த நடிப்பை பிழிகிறார்.

பாலாஜி நண்பனாக கனத்த உடலில் வரும் சபேஷ் கார்த்திக் சிரிக்க வைக்கிறார். அவ்வப்போது முறைத்து பார்க்கும் சீனியர் மாணவரிடம் நடுங்குவதும் ஒரு கட்டத்தில் அந்த மாணவன் பெண் குரலில் பேச பயம் போய் எதிர்ப்பதும் வயிறு வலிக்கும் காமெடி.

யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் மனதை வருடுகிறது. ராணாவின் ஒளிப்பதிவு கல்லூரி வாழ்வியலை கண்ணுக்குள் பதிக்கிறது.

பொருந்தாத காதலை கையில் எடுத்த இயக்குனர் அதில் ஜீவன் வைக்க முயன்று வென்றுள்ளார். கதை கல்லூரிக்குள்ளேயே சுற்றுவதை தவிர்த்து இருக்கலாம்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat