காத்திருந்த அசின் – லவட்டிக் கொண்டு போன ஜெனிலியா

அசினுக்கு இப்போதைய வில்லி த்ரிஷா கூட அல்ல… ஜெனிலியாதானாம்.

‘காக்க காக்க’ இந்தி ரீமேக்கில் அசின்தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு கூட வெளியிட்டுவிட்டார்கள். இந்தப் படத்தின் நாயகன் ஜான் ஆபிரகாமும், தயாரிப்பாளர் விபுல் ஷாவும் இதனை ஏற்கெனவே அறிவித்திருந்தனர். விபுல் ஷாவுக்கும் அசினுக்கும் நல்ல நெருக்கம் வேறு. இவர்தான் அசின் நடித்த மெகா தோல்விப் படமான லண்டன் ட்ரீம்ஸ் தயாரிப்பாளர்.

இத்தனை சாதகமான நிலை இருந்ததால் ‘ரெடி’க்குப் பிறகு காக்க காக்க ரீமேக்கில் நடிக்கப் போவதாக அசினும் பேட்டிகளில் கூறிவந்தார்.

ஆனால்அந்த வாய்ப்பை ஓசைப்படாமல் தட்டிப் பறித்துள்ளார் ஜெனிலியா. ஜான் ஆபிரகாமுடன் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்துள்ள ஜெனிலியா, அவரை தனியே சந்தித்து தனது ஒத்துழைப்பை நினைவுபடுத்தினாராம். படத்தின் இயக்குநர் நிஷிகாந்த் காமத்தையும் சமீபத்தில் தனியே சந்தித்தாராம் ஜெனிலியா.

அடுத்த சில தினங்களில் எந்த விளம்பரமும் இல்லாமல் ஜெனிலியா – ஜான் ஆபிரகாமை வைத்து போட்டோ ஷூட் கூட முடித்துவிட்டார்களாம்.

விஷயம் கேள்விப்பட்டு கொதித்துப் போனாராம் அசின். இனி எங்கே கொதிப்பது… அவர்கள்தான் எரிவதைப் பிடுங்கிவிட்டார்களே!

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat