இனிது இனிது ; ஸ்‌பெஷல் ஹைலைட்ஸ்

நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் இனிது இனிது. தெலுங்கில் 2007ம் ஆண்டு தமன்னா மற்றும் புதுமுகங்கள் நடித்து வெற்றி பெற்ற ஹேப்பிடேஸ் படமே தமிழில் இனிது இனிதாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் ஸபெஷல் ஹைலைட்ஸ் :

* அபியும் நானும், பயணம் மற்றும் இந்தி குஷி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய குகனே இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

* இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புதுமுகங்கள் வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்ததில் 60 பேரை தேர்ந்தெடுத்து அதிலிருந்து 8 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள்.

* தெலுங்கில் ஹிட்டான இரண்டு பாடல்களின் ட்யூன்களை மட்டும் தமிழில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

* மொழி தெரியாமல் இருந்தும் வைரமுத்து தமிழில் எழுதிய பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் பொருளை உணர்ந்து தமிழுக்கு பொருந்தும்படி இசையமைத்துள்ளார் மிக்கி ஜே.மேயர்.

* தனது டூயட் மூவிஸ் சார்பில் பிரகாஷ் ராஜ் இப்படத்தை தயாரித்திருந்தாலும் படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் நடிக்கவில்லை.

* வேலூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மிகவும் போராடி அனுமதி பெற்று இப்படத்தை எடுத்துள்ளனர். முன்னூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த கல்லூரியின் நிர்வாகம் கொடுத்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று 45 நாட்களுக்குள் அங்கு படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர்.

* கேரளாவின் வயநாடு பகுதியில் மழைக்காலத்தை தெரிந்து கொண்டு நடப்பு பற்றி பாடலை படமாக்கியுள்ளார் இயக்குனர். படத்தின் ஒளிப்பதிவும் இவரே என்பதால் அனைத்து பாடல் காட்சிகளையும் ரசித்து படமாக்கியிருக்கிறார்.

* படத்தின் அத்தனை பாடல்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றி இருப்பவர் மும்பையை சேர்ந்த போனி வர்மா. படத்தில் ஏராளமான புதுமுகங்கள் இருந்தாலும் அத்தனை பேருடனும் சகஜமாக பழகி, பாடல் காட்சிகளை சிறப்பாக படமாக்கி கொடுத்திருக்கிறார்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat