கமல்ஹாசனை வாழ்த்தி ஒரு சினிமா பாடல்

ஆகஸ்ட் 21, 2010 | தமிழ் சினிமா | Tags:

நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு பல்வேறு அமைப்புகளும் பாராட்டு விழாவை நடத்தி கவுரவித்து வருகின்றன.

இந்நிலையில் புதிதாக உருவாகி வரும் சினிமாவில் கமல்ஹாசனை வாழ்த்தி ஒரு பாடலையே உருவாக்கியிருக்கறார்கள். புதுமுகங்கள் நடிக்க, டைரக்டர் சரவண ‌பெருமாள் இயக்கும் புதிய படம் பரமக்குடி 1வது வார்டு. இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. அதில் ஒரு பாடல் பரமக்குடியின் வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாகவும், கமல்ஹாசனை வாழ்த்தும் வகையிலும் அமைந்துள்ளது.

சேதுபதி மன்னர் ஆண்ட வீரம் விளைந்த பூமி…
செத்தும் கொடுத்த சீதக்காதி கிழவனோட நண்பன்டா…
காதல் பேசும் கமலு சாரு பிறந்தது எங்க மண்ணுடா…
காலம் தந்த நாயகனும் உலகில் அவருதானடா…

- எனத்தொடங்கி தொடரும் அந்த பாடலை கவிஞர் கடவுள் எழுதியிருக்கிறார். சாமுவேல் பேபி என்பவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மதுமேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரிபிள் ஏ நிறுவனம் சார்பில் பரமக்குடியை சேர்ந்த முருகன், கோவிந்தராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தின் சூட்டிங் பரமக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat