பாலியல் புகார்.. விபச்சாரம்: பிரபல நடிகைகள் கைது!

சாய்ரா பானு

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக நடிகை சாய்ரா பானு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதை மருந்து கடத்தல் , விபச்சாரம், உயர் அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்த விவகாரம் என தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து புயல் வீச ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பாதுகாப்பு நிறைந்த பல அடுக்கு குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் நடிகைகள் சாய்ரா பானு, ஜோதி மற்றும் வெளிநாட்டு இளம்பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சாய்ரா பானு, பல தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

மற்றொரு நடிகை ஜோதி, ஏராளமான தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடத்துள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை சீமா இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போதை பொருள் வாங்கியதாக, நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
Read: In English
முன்னணி தமிழ், தெலுங்கு நடிகையான த்ரிஷாவின் செல்போன் எண் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் இருந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து த்ரிஷா பரபரப்பாக பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பிரபல நடிகைகள் கைது செய்யப்பட்டிருப்பது ஆந்திர திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat