அடாவடி ஆதி
மிருகம், ஈரம் என சில படங்களில் மட்டுமே வந்திருக்கிறார் ஆதி. இவர் நடித்த அய்யனார் படத்தை வாங்க ஆளில்லாமல் படத்தை தயாரித்தவர் தாடையை தடவிக் கொண்டிருக்கிறார். இந்த உலகமகா உண்மையை புரிந்து கொள்ளாமல் ஆதி போடும் ஆட்டம் இருக்கிறதே… அப்பப்பா.
அய்யனார் படத்தின் ஆடியோ விழாவின் போது ஆதி என்ற பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் ஆதியால் கொண்டுவரப்பட்ட அல்லக்கைகள் போட்ட கூச்சல் விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் நெளிய வைத்தது. இந்த செயற்கை பில்டப்பை தொடர்ந்து ஆதி மீது அடுக்கடுக்காக குற்றச்சாற்றுகள். முக்கியமாக சம்பளம்.
கால்ஷீட் கேட்க செல்கிறவர்களை ஒரு கோடி கேட்டு அலற வைக்கிறாராம் இந்த அப்கமிங் ஹீரோ. படத்தை வாங்கவே ஆளில்லை, இதில் சம்பளம் ஒரு கோடியா என ஆதியை பார்த்து சிரிக்கிறது கோடம்பாக்கம்.
பூமிக்கு வாங்கப்பா.

Link to this page