விஜய் படம் – சிறையில் சீமானை சந்தித்த கலைப்புலி தாணு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை இன்று பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சிறையில் சந்தித்துப் பேசினார்.
தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை சீமான் இயக்குவதாக இருந்தது. இதற்கான கதை விவாதமும் நடந்து வந்தது.
இந் நிலையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சென்னையில் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, சீமான் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் அந்தப் படம் தொடர்பாகவே சீமானை தாணு சந்தித்ததாகத் தெரிகிறது.

Link to this page