மும்பையில் இன்று நடந்தது: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் இந்தி டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணந்தார்
பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜூம் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர்.
பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளை யாட்டு மைய அரங்கில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

Link to this page