மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் மதராசபட்டனம் ஏமி

மதராசபட்டனம் படத்தில் மருந்துட்டியா என்ற ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஏமி ஜாக்சன். கொஞ்சும் தமிழ் பேசிய இந்த வெள்ளைக்கார குயில், மதராசபட்டனம் முடிந்த கையோடு சொந்த நாட்டுக்கு புறப்பட்டபோது, எனக்கு சென்னையை ரொம்ப பிடிச்சிருக்கு.

நல்ல வாய்ப்பு கிடைத்தால் இங்கேயே செட்டிலாக தயாரகக இருக்கிறேன், என்று கூறி விட்டுச் சென்றார். அவரது ஆசை கூடிய சீக்கிரமே நிறைவேறிவிடும் போலிருக்கிறது.

டைரக்டர் கிரீடம் விஜய் தேடிக் கண்டுபிடித்த முத்து, விரைவில் டைரக்டர் கவுதம் மேனன் மூலம் ஒய்யாரமாக தமிழ் ரசிகர்களின் மனதில் மூட்டை முடிச்சுகளுடன் குடியேறப்போகிறது.

ஆம்! கவுதம் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகி ஏமி ஜாக்சன்தானாம். தமிழ் சினிமா வாய்ப்பு என்றதும் டபுள் ஓ.‌கே. சொன்ன ஏமி, எப்ப சென்னை வரணும் என்று கேட்டிருக்கிறார்.

விரைவில் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். ஏமியை மீண்டும் திரையில் பார்க்க தமிழ் ரசிகர்களுக்கு வாய்ப்பு கைகூடி வரும்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat