மீண்டும் கௌதம் – சூர்யா கூட்டணி

செப்டம்பர் 1, 2010 | தமிழ் சினிமா | Tags:

கௌதம் – சூர்யா கூட்டணியின் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் லாபமும் பெற்றுத் தந்தது. இவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.

கௌதம் நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி வருகிறார். பாடல்கள், பின்னணி இசை எதுவுமற்ற இப்படம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர் தெலுங்குப் படம் இயக்குவார் என்று தெ‌ரிகிறது. இந்த பிஸி ஷெட்யூல்களின் நடுவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌ரீமேக்கையும் இயக்கி வருகிறார் கௌதம்.

இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெ‌ரிகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மதராசப்பட்டினத்தில் நடித்த இங்கிலீஷ் பியூட்டி எமி ஜாக்சன் நடிப்பார் என இப்போதே கிசுகிசுக்கிறார்கள்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat