நட்பு முறிந்தது; ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு

செப்டம்பர் 2, 2010 | தமிழ் சினிமா | Tags:

அசின் மும்பை பட உலகில் அறிமுகமானபோது யாரையும் தெரியாமல் தவித்தார். அப்போது ஸ்ரீதேவிதான் அவருக்கு உதவினார். தான் குடியிருக்கும் வீடு அருகிலேயே அவரை குடியமர்த்தினார்.

தனது வீட்டிலேயே சமைத்து அசினுக்கு உணவுகளை அனுப்பி வைத்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஸ்ரீதேவி வீட்டில் தான் அசினை காண முடிந்தது. இப்படி நெருக்கமாக இருந்த அவர்கள் இப்போது பிரிந்து நிற்கிறார்கள்.

காரணம் இதுதான். அசின் பழக்கத்தை வைத்து தாங்கள் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் கதாநாயகியாக நடிக்குமாறு ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் கேட்டார். அசின் ஏற்கவில்லை. நடிக்க முடியாது என மறுத்து விட்டார்.

இதனை ஸ்ரீதேவி எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாகி விட்டார். இந்திப்பட உலகினர் இந்த விஷயம் பற்றித்தான் பேசி வருகிறார்கள். அசினுக்கு நெருக்கமானவர் இதுபற்றி கூறும்போது, அசின் கைவசம் நிறைய படங்கள் உள்ளது.

“பாடிகார்ட்”, “ரெடி” படங்களில் நடித்து வருகிறார். மேலும் இருபடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். கால்ஷீட் இல்லாததால் ஸ்ரீதேவி படத்தில் நடிக்க இயலவில்லை என்றார்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat