முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?
தெலுங்கு படஉலகின் முன்னணி நடிகை ஜெனிலியா. தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய்யுடன், வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண் டிருக்கிறார். இந்திப் படங் களிலும் நடிக்கிறார்.
ஜெனிலியாவும், மகராஷ் டிர மாநில முன்னாள் முதல்- மந்திரி விலாஸ் ராவ் தேஸ்முக் மகன் ரிகேஷ் தேஷ்முக்கும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். அவர்கள் காதலுக்கு ரிதேஷ் தேஷ்முக் குடும் பத்தில் எதிர்ப்பு உள்ளது.
நடிகையை திருமணம் செய்யக் கூடாது என்று அவர்கள் கண்டித்து வருகின்றனர். இதனால் காதல் ஜோடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்க்கின்றனர்.
இந்த நிலையில் ஜெனி லியாவும், ரிதேஷும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் திடீர் வதந்தி பரவியுள்ளது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்றும், உறவினர்கள் யாரையும் அழைக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு, இந்தி படஉலகில் இந்த வதந்தி வேகமாக பரவியுள்ளது. படப்பிடிப்புகளில் இதுவே பேச்சாக உள்ளது.
ஏற்கனவே காதல் விஷ யத்தை இருவருமே மறுத்து வந்தனர். அது போல் ரகசிய திருமணம் வதந்தி பற்றி கேட்ட போதும் ஜெனிலியா மறுத்தார். அவர் கூறியதாவது:-
எனக்கும், ரிதேஷ்தேஷ் முக்குக்கும் ரகசிய திரும ணம் நடந்ததாக பரவிய வதந்தியால் அதிர்ச்சியா னேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள வில்லை. இந்த வதந்தியை கிளப்பி விட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. ஏன் தான் இப் படியெல்லாம் புரளி கிளப்புகிறார்களோ? இத னால் அவர்களுக்கு என்ன பயன் என்று புரிய வில்லை.
காதல் எனது சொந்த விஷயம். அதை வெளியில் பேச வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகளை பற்றி கிசு கிசுக்கள் வருவதது சகஜ மானது தான். ஆனால் திருமணம் நடந்ததாக வதந்தி பரப்புவதைத் தான் பொறுக்க முடியவில்லை. எல்லோருக்கும் சொல்லி விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன். ரகசிய திருமணம் நடக்கும் அளவுக்கு நான் கோழைஇல்லை.
இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

Link to this page