சின்ன அசினின் கிளாமர் பாலிஸி!

செப்டம்பர் 2, 2010 | தமிழ் சினிமா | Tags:

நடிகர் விஜய்யால் சின்ன அசின் என்று புகழப்பட்டவர் நடிகை பூர்ணா. தமிழ், மலையாளம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா தனக்கென ஒரு கிளாமர் பாலிஸியை வகுத்து வைத்திருக்கிறாராம்.

இதுபற்றி அவர் கூறுகையில், எனக்கு கிளாமர் பிடிக்காது. அதற்காக என்னை கிளாமருக்கு எதிரி என்று நினைத்து விடாதீர்கள். எனது உடல் அமைப்புக்கு கிளாமர் உடைகள் பொருந்தாது.

அதை நானே ரசிக்க முடியாதபோது ரசிகர்களை ரசிக்கச் சொல்லக் கூடாது. எனக்கு எந்தவிதமான உடைகள் பொருந்துகிறதோ அதை அணிந்து நடிப்பேன். சில மாடர்ன் டிரஸ்கள் எனக்கு பொருந்தும். அதை அணிவதில் கஷ்டமில்லை. கமர்சியல் ஹீரோயினாகி பணம் சம்பாதிப்பதை விட, நல்ல கேரக்டர்களில் நடித்து புகழ் சம்பாதிக்கவே விரும்புகிறேன், என்று சொல்லும் பூர்ணா சம்பளத்திற்கும் தனி பாலிஸி வைத்திருக்கிறாராம்.

நான் எனக்கு சம்பளமாக 15 லட்சம் வேண்டும், 25 லட்சம் வேண்டும் என்றெல்லாம் கேட்டதே இல்லை. முதலில் நல்ல கேரக்டர் கொடுங்கள். அதில் என் திறமையை பாருங்கள். அதற்கேற்ப நீங்கள் தரும் சம்பளத்தை பெற்றுக் கொள்கிறேன் என்றுதான் சொல்லுவேன்.

இப்போது மட்டுமல்ல, இதை விட உயர்ந்த இடத்துக்கு வந்தாலும் என்னுடைய பாலிசி இதுதான் என்கிறார். பலே பூர்ணா…!

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat