ப‌ரிசோதனை முயற்சியில் விவேக்

செப்டம்பர் 2, 2010 | தமிழ் சினிமா | Tags:

ஹீரோ ரோலும் விவேக்கும் எலியும் பூனையும் போல. இரண்டும் இணைவதேயில்லை. இந்த ச‌ரித்திர உண்மை தெ‌ரிந்தும் விவேக் விடுவதாக இல்லை. ஆச்ச‌ரியம் என்னவென்றால் சில தயா‌ரிப்பாளர்களும், இயக்குனர்களும் விவேக்கையும் விடுவதாயில்லை.

ராசய்யா படத்தை இயக்கிய கண்ணன் நான்தான் பாலா என்ற படத்தை இயக்குகிறார். இவன்தான் பாலா என்ற பெய‌ரில் இயக்குனர் பாலா தனது சுயச‌ரிதையை ஒரு வார இதழில் தொடராக எழுதியது நினைவிருக்கலாம். அதற்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம்.

விஷயத்துக்கு வருவோம். நான்தான் பாலாவில் விவேக்தான் நாயகன். கமல் சொன்னது போல் படப்பிடிப்புக்கு கிளம்பும்முன் ஒத்திகை பார்த்து வருகிறது நான்தான் பாலா டீம். பெ‌ரிய காமெடி நடிகர் என்ற பந்தா இல்லாமல் விவேக்கும் இந்த ஒத்திகையில் தவறாமல் கலந்து கொள்கிறார்.

இந்தப் படமாவது விவேக்கை ஹீரோவாக கரை சேர்க்க வேண்டும்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat