செளந்தர்யா மெஹந்தி நிகழ்ச்சி – ஆடிப் பாடிய ரஜினி

செப்டம்பர் 2, 2010 | தமிழ் சினிமா

செளந்தர்யா ரஜினிகாந்த்தின் மெஹந்தி நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடந்துள்ளது. அதில் குடும்ப உறுப்பினர்கள், மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் உற்சாக மிகுதியில் டான்ஸ் ஆடி பாடினாராம்.

செளந்தர்யா ரஜினிகாந்த்- அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழை முக்கியப் புள்ளிகளுக்கு ரஜினி நேரில் சென்று கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நட்சத்திர ஹோட்டலில் மெஹந்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் கிராண்ட் ஆக இருந்ததாம் இந்த மெஹந்தி நிகழ்ச்சி. குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனராம்.

நிகழ்ச்சியில் செளந்தர்யா மற்றும் அஸ்வினின் சிறு வயதுப் புகைப்படங்களை வைத்து ஒரு வீடியோ ஷோவைப் போட்டு அனைவரையும் கலகலப்பாக்கியுள்ளனர். அப்போது அஸ்வினின் புகைப்படத்தைப் பார்த்த ரஜினி, மிகவும் ஹேன்ட்சம்மாக இருக்கிறீர்கள் என்று அஸ்வினைப் பாராட்டினாராம்.

பின்னர் ஆட்டம், பாட்டம் ஆரம்பித்தது. பழைய தமிழ்ப் பாடல்களை நிறைய போட்டு ஆடிப் பாடியுள்ளனர். அப்போது அதோ அந்தப் பறவை போல பாடலுக்கு உற்சாக மிகுதியில் ரஜினியும் ஆடியபடி பாடி மகிழ்ந்தாராம்.

நிகழ்ச்சியில் செளந்தர்யா கருநீல நிற சல்வார் உடையில் வண்ணமயமாக காட்சி அளித்தாராம்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காக்டெய்ல் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்களாம்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat