தமன்னாவின் வேகம்
ஹன்சிகா மோத்வானி வந்திருக்கிறார், அனுஷ்கா அலையை கிளப்புகிறார், இன்னொருபுறம் டாப்ஸீ பட்டையை கிளப்புகிறார்… இனி தமன்னாவின் மார்க்கெட் அவ்வளவுதான் என சிலர் கோடம்பாக்கத்தில் முரசறைந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகுதான் தமன்னாவின் மார்க்கெட்டே சூடு பிடித்திருக்கிறது.
ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ரீமேக்கில் த்ரிஷா, இலியானாவின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் தற்போதையை நிலவரப்படி அந்த இடத்தை கைப்பற்றியிருப்பவர், தமன்னா என்கிறார்கள்.
அதேபோல் பாலாவின் அவன் இவனில் ஒரு பாடலுக்கு ஆடவும் பாலா இவரைத்தான் தேர்வு செய்திருக்கிறார் என்கிறார்கள் அவன் இவன் யூனிட்டில். இந்த இரண்டு படங்களிலும் நடிக்க மிகப்பெரிய போட்டியே இருந்தது. என்றாலும் அனைவரையும் புறந்தள்ளி வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார் தமன்னா.

Link to this page