விஜய் நடிக்கும் ‘ராஸ்கல்’… ‘என்னய்யா தலைப்பு இது’?

விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குவதாகவும், தலைப்பை மாற்றுங்கள் என இப்போதே கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெமினி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஆர்யா, ஜீவா இணைந்து நடிக்கிறார்கள். தமன்னா நாயகியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக் இது.

இந்தப் படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால் அதற்குள் இந்தப் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இந்தப் படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக இணையங்களிலும் சில வார இதழ்களிலும் செய்தி வந்துள்ளது. இது விஜய் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.

விஷயம் கேள்விப்பட்டு, விஜய் ரசிகர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “என்ன தலைப்புய்யா இது… தயவு செய்து படத்தின் பெயரை மாத்துங்க. ஏற்கெனவே அந்தப் பெயரைச் சொல்லித்தான் வீட்டிலும் வெளியிலும் திட்டுகிறார்கள். இந்த லட்சணத்தில் படத்தின் பெயரே இப்படி இருந்தால் வெளங்கின மாதிரிதான். ‘ராஸ்கல் விஜய் ரசிகர் மன்றம்’ என்று பெயர் வைத்தால் நல்லாவா இருக்கும்?” என்று சலித்துக் கொள்வதாக ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே ராஸ்கல் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்தார் ஜெயம் ரவி. ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அறிவுரை சொன்னதால் அந்தப் படத்துக்கு ‘தாஸ்’ என்று தலைப்பிட்டது நினைவிருக்கலாம்!

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

Google search results ratings, 8.9 out of 10 based on 1011 ratings
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat