சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

5. விலை
சென்ற வாரம் வெளியான படங்களில் ஒன்று விலை. இப்படம் முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. வம்சம்
பாண்டிரா‌ஜின் வம்சம் ரசிகர்களைப் பெ‌ரிதாக‌க் கவரவில்லை. இரண்டு வாரங்களில் இப்படம் 53 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 5.9 லட்சங்கள் மட்டுமே.

3. மாஸ்கோவின் காவி‌ரி
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 9.4 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

2. இனிது இனிது
கே.விகுகனின் கல்லூ‌ரி நாட்களுக்கு பரவலான வரவேற்பு கிடைத்திருக்கிறது. சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 9.6 லட்சங்கள். இதுவரை இப்படம் சென்னையில் மட்டும் 46 லட்சங்களை வசூலித்துள்ளது.

1. நான் மகான் அல்ல
சுசீந்திரனின் இந்த ஆ‌க்சன் படம் சென்ற வார இறுதியில் 61 லட்சங்களை வசூலித்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரை இதன் மொத்த சென்னை வசூல் 2.04 கோடிகள்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat