மீரா ஜாஸ்மின் காதல் – உறுதி செய்த காதலர்
மீரா ஜாஸ்மின் மான்டலின் ஸ்ரீனிவாசின் சகோதரர் ராஜேஷை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா, இருவரும் இப்போதும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கல் கால நிலையைப் போல அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராஜேஷ், தனது வீட்டார் தனது காதலை ஊக்குவிப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். அவர் தனது காதலை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது இது இரண்டாவது முறை.
இந்தமுறை அவரது சகோதரர் மாண்டலின் ஸ்ரீனிவாசும் உடனிருந்ததால் இந்தக் காதல் விரைவில் திருணமத்தில் முடியும் என்கிறார்கள். அப்படி முடிய நமது வாழ்த்துகள்.

Link to this page