தனித் தனி மேனேஜர் – தடலாடி நமீதா
ஒவ்வொரு மொழிப் படத்துக்கும் தனித் தனியாக மேனேஜரைப் போட்டு வாய்ப்புளை வளைக்க களம் இறங்கியுள்ளாராம் நமீதா.
கவர்ச்சிகரமாகவே நடித்து வந்த நமீதாவுக்கு அதில் அலுப்பு தட்டவே இனிமேல் முழு நீள கவர்ச்சியில் நடிக்க மாட்டேன். கேரக்டரோடு கூடிய கவர்ச்சி பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறார்.
அவர் இப்படி முடிவெடுத்ததும் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நமீதாவை அவாய்ட் செய்ய ஆரம்பித்துள்ளனராம். இதனால் அவரைத் தேடிப் போக வேண்டிய வாய்ப்புகள் ஹேமமாலினி போன்ற பிற கவர்ச்சி நடிகைகளை நோக்கி ஓடி வருகிறதாம்.
இதனால் வில்லி மற்றும் சாதாரண கேரக்டர்களுக்கும் தயார் என அறிவித்துள்ளார் நமீதா. அப்படியும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து மலையாளம், தெலுங்கில் முயற்சிகளைத் தொடங்கியுள்ளார்.
அங்கும் அவருக்கு கவர்ச்சி ரோல்களே வருகிறதாம். இதனால் அலுத்துப் போன நமீதா, இதையும் விட்டால் சுத்தமாக ஒதுக்கி விடுவார்கள் என்பதால் அவற்றை ஒப்புக் கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளாராம்.
அதேசமயம், தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்தில் வாய்ப்புகளை வளைப்பதற்காக தனித் தனியாக மேனேஜர்களைப் போட்டு வைத்துள்ளாராம்.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மேனேஜரை வைத்து தனது கேரியரை மெயின்டெய்ன் செய்ய ஆரம்பித்துள்ள நமீதாவுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது போகப் போகத்தான்தெரியும்.

Link to this page