இரட்டை வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி
பருத்திவீரன், பையா படங்களைத் தொடர்ந்து நான் மகான் அல்ல படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. தனது இமேஜை மேலும் உயர்த்தும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார் கார்த்தி.
இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் தற்போது வந்துள்ளது. இப்படத்தையும் வழக்கம் போல் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜனே தயாரிக்கிறார், ஹீரோயினாக தமன்னா தான் நடிக்க போகிறார். வழக்கமான யுவன்சங்கர் ராஜா இல்லாமல் இம்முறை கார்த்திக்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.
எடிட்டிங் ஆண்டனி, ஒளிப்பதிவு வேல்ராஜ், பாடல்களை அறிவுமதி, நா.முத்துக்குமார், விவேகா எழுதுகிறார்கள்.
இப்படத்தில் சந்தானம் முதல் முறையாக கார்த்தியுடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடிக்க போகிறார். சிவா இயக்கும் இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் படத்தின் ஹைலைட்.
கார்த்தியை மாறுபட்ட கோணத்தில் காட்டும் இந்த படத்திற்கு சிறுத்தை என பெயரிட்டுள்ளார் சிவா.
தெலுங்கில் 2 வெற்றி படங்களை இயக்கிய சிவா, தமிழுக்கு முதல்முறையாக வருகிறார்.

Link to this page