திட்டத்தை மாற்றிய த்‌ரிஷா

செப்டம்பர் 5, 2010 | தமிழ் சினிமா

கட்டா மிட்டா படத்தில் நடிக்கும் போது த்‌ரிஷாவின் திட்டம் வேறு மாதி‌ரி இருந்தது. கட்டா மிட்டாவுக்குப் பிறகு அப்படியே இந்தியில் செட்டிலாக வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

இதன் காரணமாக தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளை அவர் கறாராக மறுத்து வந்தார். இந்தி‌ப் பட வாய்ப்பு கிடைத்த பிறகு அவர் ஒப்புக்கொண்ட ஒரே படம், கமலின் மன்மதன் அம்பு.

ஆனால் கட்டா மிட்டாவின் தோல்வி த்‌ரிஷாவை வேறு மாதி‌ரி சிந்திக்க வைத்துள்ளது. தமிழ், தெலுங்கில் நடிக்க மீண்டும் ஆர்வம் காட்டுகிறார். தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க இலியானா மறுக்க, அந்த இடத்தை கர்ச்சீப் போட்டு பிடித்துள்ளார் த்‌ரிஷா.

இது சைஃப் அலிகான் நடித்த லவ் ஆ‌ஜ் கல் படத்தின் தெலுங்கு ‌‌ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat