செப்.10 மூன்று படங்கள்
எந்திரன் இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போகும் என்பதால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை அவசர அவசரமாக வெளியிடுகிறார்கள். செப்டம்பர் 10ஆம் தேதி மட்டும் மூன்று முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.
ஹென்றி தயாரித்திருக்கும் வந்தே மாதரம் அதில் ஒன்று. மம்முட்டி, அர்ஜுன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் சினேகா பைலட்டாக நடித்துள்ளார். ஹென்றி தரமான படங்களை மட்டுமே இயக்குவார் என்பதும், மம்முட்டி, அர்ஜுன் காம்பினேஷனும் படத்தின் பாஸிடிவ் அம்சங்கள்.
அடுத்தப் படம் துரோகி. மணிரத்னத்தின் முன்னாள் அசிஸ்டெண்ட் சுதா இயக்கியிருக்கும் இந்தப் படத்திலும் இரண்டு ஹீரோக்கள் ஸ்ரீகாந்த், விஷ்ணு. பூனம் பஜ்வா, பூர்ணா, பூஜா என படத்தில் ஒரு பூந்தோட்டமே இருக்கிறது.
மூன்றாவது ஆர்யா, நயன்தாரா நடித்திருக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கூடுதல் அட்ராக்சன் சந்தானம். படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுவதால் இப்போது பாஸ்கரன் பாஸான மாதிரிதான்.
கடைசி நேரத்தில் இந்த மூன்றுடன் வேறு சில படங்களும் திரைக்கு வரக்கூடும் என்கிறார்கள்.

Link to this page