வசூலில் ‘அவதாரை’ மிஞ்சிய ‘3 டி’ செக்ஸ் படம்!!

ஏப்ரல் 23, 2011 | தமிழ் சினிமா

உலகம் என்னதான் வேகமாக முன்னேறினாலும், எல்லா நாடுகளிலும் மனிதர்களின் அடிப்படை பலவீனம் பணம்-செக்ஸ்தான். அதிலும் இந்த இரண்டாவது சமாச்சாரம் எங்கும் எவர்கிரீன் மேட்டர். சினிமா, எழுத்து என எதிலும் செக்ஸ்தான் பிரதானமாக விற்பனையாகிறது.

இப்போது, ஹாங்காங்கில் தயாராகி வெளிவந்துள்ள உலகின் முதல் 3 டி செக்ஸ் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.

‘3 டி செக்ஸ் அண்ட் ஜென்: எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’ (3-D Sex and Zen: Extreme Ecstasy) என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த சீன மொழிப் படம், முழுக்க முழுக்க உடலுறவு மற்றும் செக்ஸ் காமெடிக் காட்சிகள் நிறைந்தது.

ஜப்பானை சேர்ந்த ‘பலான’ பட நடிகர் ஹிரோ ஹயானா, நடிகை சோரிஹரா, ஹாங்காங் நடிகை வோனிலியூ ஆகியோர் நடித்துள்ளனர். 1991-ம் ஆண் வெளியான செக்ஸ் அண்ட் ஜென் என்ற படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். சீனாவின் மிங் வமிசத்தைச் சேர்ந்த மன்னரது அந்தப்புர கூத்துகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

இந்தப் படத்தை சீனாவில் திரையிட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் வெளியிட தடையில்லாததால், கடந்த செவ்வாயன்று செக்ஸ் அண்ட் ஜென் 3 டி படம் வெளியானது.

வெளியிட்ட முதல் காட்சியிலிருந்து படத்துக்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோர் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

ஹாங்காங்கில் முதல் நாளிலேயே ரூ.1 கோடியே 58 லட்சம் வசூலித்தது இந்தப் படம்.

அவதார் படம் ஒரே நாளில் ரூ.1 கோடியே 30 லட்சம் வசூலித்ததுதான் இதுவரை ஹாங்காங் பாக்ஸ் ஆபீஸ் சாதனையாக இருந்தது.

படம் வெளியான 5 நாட்களில் ரூ.80 கோடி வசூலை கொடுத்துள்ளது. தைவான் நாட்டிலும் படத்தை வெளியிட்டு உள்ளனர். ஒரு வாரத்தில் ரூ.2.5 கோடி வசூல் குவிந்துவிட்டது. படம் வெளியான தியேட்டர்களில் தொடர்ந்து கூட்டம் அலைமோதுகிறது.

சீனாவில் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஏராளமானோர் அங்கிருந்து ஹாங்காங்குக்கு வந்து படம் பார்த்துச் செல்கின்றனர்.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் தயாராகவிருக்கிறதாம்.