பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்

ஜூலை 5, 2011 | தமிழ் சினிமா

கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் வரை 68 படங்கள் ரிலீசாகி உள்ளன. 21 டப்பிங் படங்கள் வந்துள்ளன. இவற்றில் எந்திரன் 150 நாட்களும், சிங்கம்புலி, சிறுத்தை, மைனா, காவலன் உள்ளிட்ட சில படங்கள் 100 நாட்களும் ஓடியுள்ளன. நிறைய படங்கள் தோல்வி அடைந்து தயாரிப்பாளர்களை நஷ்டமடைய வைத்தன.

ஆனால் சிறு பட்ஜெட்டில் தயாரான ஆபாச படங்கள் லாபம் ஈட்டி உள்ளன. அப்படங்களை பார்க்க ரசிகர்கள் திரள்கிறார்கள். எனவே அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை திரையிட தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கவர்ச்சியுடனான திரில்லர் படங்களுக்கும் கிராக்கி. சென்னையில் அதிகமான தியேட்டர்களில் இதுமாதிரியான படங்களே திரையிடப்பட்டு உள்ளன. தற்போது ஓடிக் கொண்டிருக்கும் அரங்கேற்றநாள், சின்னஞ்சிறுசுகள் போன்றவை இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்கள் ஆகும்.

சமீபத்தில் அநாகரீகம், ஒருசந்திப்பில், தாரம், சாந்தி அப்புறம் நித்யா போன்ற படங்கள் ரிலீசாகி லாபம் பார்த்தன. மலையாளத்தில் வெளியான “நதிநீர் வேதம்” ஆபாச படமும் சென்னையில் ரிலீசாகி வசூல் ஈட்டியது.

இதுபோன்ற ஆபாச கதைகளுடன் மேலும் 25 படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன. முன்பெல்லாம் சென்னை புறநகர் பகுதிகளில்தான் இப்படங்கள் திரையிடப்பட்டன. ஆனால் இப்போது சென்னையில் உள்ள பிரதான தியேட்டர்களில் இவை ரிலீசா கின்றன.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

TamilWire.com Latest English News

Latest Songs Downloads

Latest Tamil Movie Trailers to Watch Online

123Tamilgallery.com Latest Tamil Galleries