எல்லைகளை கடக்கும் தமன்னாவின் லவ்

ஆகஸ்ட் 17, 2011 | தமிழ் சினிமா

தமன்னா, நாக சைந்தன்யா நடித்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘100% லவ்’. ஆந்திர எல்லையை கடந்து தமிழில் வெளியாகபோகிறது இந்த லவ் ஸ்டோரி. ஆம் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

தெலுங்கு படத்தை தயாரித்த கீதா ஆர்ட்ஸ் தமிழ் ரீமேக்கையும் தயாரிக்க இருக்கிறது. நாயகனாக அல்லு அரவிந்த் தம்பி அல்லு ஸ்ரீஸை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். நாயகியாக தெலுங்கில் நடித்த தமன்னாவே இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ’ஜெயம் கொண்டான்’, ’கண்டேன் காதலை’, ’வந்தான் வென்றான்’ ஆகிய படங்களை இயக்கி இருக்கும் கண்ணன் இப்படத்தினை இயக்கலாம் என்று சொல்லப்படுகிறது.