நண்பனில் நடிக்காதது மகிழ்ச்சிதான்! மாதவன் பளீச் பேட்டி!!
நண்பன் படத்தில் நடிக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான்; அதனால் மகிழ்ச்சியடைந்துள்ளேன், என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி, வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம் நண்பன். இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்கள் நடித்துள்ளனர்.
முதலில் இப்படத்தில் நடிக்கும்படி மாதவனிடம்தான் கால்ஷீட் கேட்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ மாதவன் நடிக்க முடியாமல் போனது. தற்போது ஆர்யாவுடன் மாதவன் இணைந்து நடித்த வேட்டை படம் ரிலீஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுபற்றி மாதவன் அளித்துள்ள பேட்டியில், வேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்தது ரொம்ப பிடித்திருந்தது. தமிழில் இரண்டு ஹீரோ படங்கள் இனி நிறைய வரும் என நினைக்கிறேன். நண்பன் படம் நன்றாக வந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் அதில் நடிக்கவில்லையே என்ற வருத்தம் துளியும் இல்லை. நடிக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். அதனால் மகிழ்ச்சியடைந்துள்ளேன், என்று கூறியுள்ளார்.

Link to this page