அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது : அஜித் அதிரடி பேட்டி!

பெப்ரவரி 9, 2012 | தமிழ் சினிமா

எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது. அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது நடிகர் அஜித் அதிரடியாக கூறியிருக்கிறார். தற்போது பில்லா-2 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டுல ஏற்கனவே நிறைய அரசியல்வாதிங்க இருக்காங்க. இதுல அரசியலே என்னவென்று தெரியாத நிலையில், அரசியல பத்தி முழுசா புரிஞ்சுக்காம, வெறும் சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து நான் எப்படி அரசியலில் இறங்குவது. நிச்சயம் நான் அப்படி செய்ய மாட்டேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும் தான். தெரிஞ்ச சினிமாவை விட்டு தெரியாத அரசியலில் இறங்கி, மக்களையும் குழப்ப மாட்டேன். அரசியலுக்கு வரும் எந்த தகுதியும் எனக்கு சுத்தமா கிடையாது என்று கூறியுள்ளார்.