ஜூன் 21-ல் தலைவா இசை… ஆகஸ்டில் படம் ரிலீஸ்!

ஜூன் 4, 2013 | தமிழ் சினிமா

04-thalaiva--movuie-300சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 21-ம் தேதி நடக்கிறது. விஜய்யின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. விஜய் – அமலா பால் ஜோடியாக நடித்துள்ள படம் தலைவா. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ளார். ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக பாடல்களை வெளியிடுகிறார்கள். சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையைப் பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழக, கர்நாடக, கேரள உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுளது. வெளிநாட்டு உரிமை, விஜய் படத்துக்கு இதுவரை கிடைக்காத அளவுத்து நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்.